புதன், 28 ஜூன், 2017

கவியருவி குழுமம்-21-5-2017-படம் பார்த்து ஒரு நிமிடக்கதை

இலட்சிய கரங்கள்
சிவகாமி குழந்தையை குளிப்பாட்டிக்கொண்டிருக்கும்போது
அவள் புருஷன் முத்துவோட நண்பன் கதிர் போதையுடன் வந்தான்
இவன் எதுக்கு இங்கே வரான் படுபாவி இவந்தானே என் புருஷனை
குடிக்க வச்சு கெடுத்ததே இப்ப இங்கே எதுக்கு வந்திருக்கான் யோசித்தபடியே குழந்தையை குளிப்பாட்டுவதில் கவனம்செலுத்தினாள்
‘’என்ன சிவகாமி வந்தவ்னை வான்னு கூட சொல்லமாட்டியா ?என்ன
இருந்தாலும் நான் உன் புருஷனோட தோஸ்து இல்லையா ?’’
‘பதில் ஏதும் கூறாமல் அவள் காரியத்திலேயே கவனமாய் இருந்தாள்
‘’இதோ பார் இந்த லோகத்திலே மூணு பொட்டை புள்ளைகளை வச்சுகிட்டு
நீ என்ன செய்வே ?அதனால நான் ஒரு ஐடியா சொல்றேன் கேட்டின்னா
நீயும் உன் புள்ளைகளும் சந்தோஷமா வாழலாம் இல்லேன்னா கஷ்டம்தான் தனியா இருக்க முடியாது பொம்பளைங்க ‘’
‘’ நீ சொல்றது நியாயம்தான் என்ன ஐடியா சொல்லு ’’
’’ஹி ஹி பொழச்சுக்குவே இப்படித்தான் இருக்கணும் நான் என்ன சொல்ல வரேன்னா நீயும் தனியாத்தான் இருக்கெ நானும் தனியாத்தானிருக்கேன் உன் புள்ளைகளை என் புள்ளைகளா பார்த்துக்கி்றேன் , பேசாம என் வீட்டிலே வந்து நீ இருந்துக்க..’’
அவன் சொல்லி முடிப்பதற்குள் அவள் சீறினாள்
‘’அடப்பாவி ஒரு நண்பனோட மனைவி கிட்ட இப்படி பேசுறோமேன்னு
உனக்கு வெட்காமாயில்லே தூத்தெறி ..என்னா தைரியம் இருந்தா இப்படிபேசுவே நீ எழுந்திரு மருவாதையா இல்லே மருவாதை கெட்டுப்போய்டுவே விளக்கமத்து கட்டைக்கு பட்டுக்குஞ்சம் கேட்குதோ
இப்படி பேச உனக்கு அருவருப்பா இல்லே போ போயிடு ‘’
என் கைகளிலே வலு இருக்கு என் புள்ளைகளை காப்பாத்த எனக்குத்தெரியும் சிறகில்லா பறவைன்னா சிதச்சுடலாம்னு நினைக்கிறியோ ..அடிவாங்காம போய்ச்சேறு ‘’
‘’சிவகாமி நிறுத்து நான் குடிகாரன் தான் ஆனால் துரோகி இல்லேஉன் புருஷன் குடிக்க நானும்தான் காரணம் அவன் போனதிலேயிருந்துனான் செய்த தப்புக்கு பிராயச்சித்தமா உனக்கு உதவணும்கிற நல்ல எண்ணத்தொடுதான் இங்கே வந்தேன் நீ எல்லோரையும் போலத்தான் என்னையும் நினைச்சிட்டே நான் சம்பாதிக்கிற காசிலே நீ உன் புள்ளைகளை படிக்க வைக்கலாம்னுதான் வந்தேன்
நீ இந்த குடிசையிலே தனியா இருந்தா நல்லது இல்லேன்னுதான் என் ஓட்டு வீட்டிலே வந்து இருக்க சொன்னேன் எத்தனை நாள் உன்புருஷனோடு இங்கே வந்திருக்கேன் ஒரு நாளாவது உன்னை தப்பா
பார்த்திருப்பேனா என்னையப்போய் தப்பா நினைச்சுட்டியே
நானும், ஒரு நல்ல தாயிக்குப்பிறந்தவந்தான் .என் தங்கச்சியா இருந்து
யாருமில்லாத எனக்கு சோறு ஆக்கிப்போட்டுகிட்டு இருன்னு சொல்லத்தான் வந்தேன் எப்ப நீ என்னை தப்பா நினச்சுட்டியோ
அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன் நான் இந்த ஊரைவிட்டே போயிடறேன் சிவகாமி நான் பேசியது தப்பா இருந்தா என்னை மன்னிச்சுடு ‘’ சொல்லிவிட்டு விடு விடுவென நடந்தான் சோகத்தோடு
சீச்சி நான் ஒரு அவசரகுடுக்கை இந்த நல்லவனைப்போய்…
வேண்டாம் போகட்டும் என்னதான் அவன் தங்கச்சியா நினைத்தாலும்
இந்த ஊரு உலகமும் தப்பாத்தானே பார்க்கும்….. மனசிலே வலு இருக்கு
கையிலே தெம்பிருக்கு என் புள்ளைகளை நான் காப்பாத்திடுவேன்
வைராக்கியத்தோடு குழந்தையை கட்டியிருந்த புடவையாலேயே துவட்டிகொண்டு குடிசைக்குள் நுழைந்தாள் சிவகாமி
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக