புதன், 28 ஜூன், 2017

சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா== 12 -5=2017=புவியை மறந்த மேகங்கள்

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 12/05/2017நடந்து முடிந்தபாரதிதாசன் கவிதை எழுதும்
போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர்
கவிஞர் மதுரா அவர்கள்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகளுடன்
புவியை மறந்த மேகங்கள்
புவியை மேகம் மறந்ததால் எங்கும்
புல்கூட காய்ந்தே போனது நிலத்தில்
பூமி தனக்கு பூஜை போடவா சொன்னாள்
புகையால் அச்சுறுத்தாதே என்றுதானே சொல்கிறாள்
விருட்சங்களை வெட்டி சிதைத்தாயே
மேகத்தை வரவழைக்கமுடியுமா
நிலமகளைத் துளையிட்டு நீரை உறிஞ்சினாய் சிறு
நிலத்தைக்கூட விடாமல் கட்டிடங்களால் நிரப்பினாய்
உப்பிட்ட தெய்வத்தை நன்றி கொல்வோமானால்
எப்போதும் இல்லை நிலை வாழ்வு என்று கற்பிக்கவே
புவியை மேகங்கள் மறந்தன போலும்
உனக்குத் தகுமோ இச்செயல் மேகமே
உன்னிடமே நான் முறையிடுகிறேன்
வாழவிடாமல் பெய்து கெடுக்கின்றாய் சில நேரம்
வாழ்வாரை பெய்யாமலும் கெடுக்கின்றாய்
போதும் வறட்சி பொங்கி வா மழையே
கார்மேகமே கருணை செய் எங்கள் மனிதர்கள்
உணர்ந்து விட்டார்கள் தங்கள் பிழையை
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக