வெள்ளி, 12 மே, 2017

தமிழமுது

வாழ்ந்து முடித்த கோழியும் வாழப்போகும் முட்டையும்
செத்துக் கிடக்கின்றன
ஒரே தட்டில் பிரியாணியாய்.... தலைப்பு தமிழமுது கவிச்சாரல்
வாழ்ந்து முடித்த கோழியும் வாழப்போகும் முட்டையும்
செத்துக் கிடக்கின்றன
ஒரே தட்டில் பிரியாணியாய்....
பட்டம் பதவி பணம் புகழ் பறிக்கும்
துட்ட மனத்தார் இட்டதே சட்டம் மேடைப்பேச்செல்லாம்
வேடப்பேச்சாயிற்று
உங்களால் நான்
உங்களுக்காக நான் என
அடிக்கடி மேடையில்
முழங்கப்படும் ஒலி
உதட்டில் தடவிய வெல்ல ஒலி
தேர்தல் நிதி என்றே சொல்லி
தேத்துவார் குடும்பத்திற்கு நிதி
பிறந்த நாள் பெயரிலோ
பெரும் பொருட்கொள்ளை
கிளை விட்டு கிளைதாவும் மந்திபோல்
கட்சிவிட்டு கட்சி தாவும் மந்திரிகள்
பதவிக்கும் புகழுக்கும் ஆசை கொண்டு
பொது நலம் பேணுவதாய் நடிக்கிறார்
கைக்காட்டி பிழைக்கும் எட்டப்பன்களை
வழிகாட்டியாய் எண்ணி புகழ்வார்
காட்டில் வாழும் மிருகங்களெல்லாம்
நாட்டிலே நடமாடும் நிலைதான் இன்று
வாழ்ந்து முடித்த கோழியாய் ஆட்சியாளர்களும்
வாழப்போகும் முட்டையாய் மக்களும்
ஒரேத்தட்டில் பிரியாணியாய்செத்துக்கிடக்கிறார்கள் நலமிழந்து வாழ்க்கைத்துயரோடு
சரஸ்வதிராசேந்திரன்
Mugan Mugan
Mugan Mugan வெள்ளந்தி மக்கள் கூட்டம்
சாவு வீட்டில் குடி கொண்டுள்ளது!
கழுத்தினிலே மாலை அணிவித்து
பூசாரி அழைத்துச் செல்லும்
ஆட்டு மந்தைகளுக்கு,
பிரியாணியா போடப் போகிறான்!
முட்டாள்கள் அத்தனையும்
ஒரே இடத்தில் குழுமியிருந்தால்
பிச்சைக்காரனும்
பணக்காரனே!
படிக்காதவன் கல்வியமைச்சர்!
கணக்கு தெரியாதவன் நிதி அமைச்சர்!!
ஒன்றுமே தெரியாதவன் மந்திரி!
கொடுமைகளை வரவேற்கும்
உங்கள் ஒட்டு...
அதற்கு கொடுக்க வேண்டாமா..
ஹஹா வேட்டு..!!
அருமை சிறப்பான சொல்லாடல்...வாழ்த்துகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக