வெள்ளி, 30 டிசம்பர், 2016

தமிழ்க் கவிதைப் பூங்கா



‎Nirmala Ramasamy‎ to தமிழ்க் கவிதைப் பூங்கா

16 hrs · Ipoh, Malaysia ·
#அமுதசுரபிகவிதைப்புத்தகம் - 03 - 146. சரஸ்வதி ராஜேந்திரன்
எழுதிய கவிதை இன்றைய தேர்வு
¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶
நாலெழுத்து நாங்க படிக்கலே
இருந்தாலும் கண்ணீர் வடிக்கலே
படிச்சவன் நாட்டை பாழாக்குறான்
படிக்காத நாங்கவிவசாயம் பண்றோம்
மழை வெயில் பார்க்காம
உழைச்சுத் தானே உண்கிறோம்
ஏச்சு யாரையும் பிழைச்சதில்லே
ஏமாற்றி என்றும் வாழ்வதில்லே
இருப்பதை கொண்டு நாளும்
திருப்தியா என்றும் வாழ்கிறோம்
வேஷம் போட்டு வாழலே
பாசம் கொண்டு வாழறோம்
அல்லும் பகலும் உழைக்கிறோம்
கல்லும் புல்லும் சுமக்கிறோம்
கொல்லும் துன்பம் வெல்லுறோம்
கோடிக் கதைகள் சொல்லுவோம்
கள்ளமிலா நல்ல குணம்
பிள்ளையென்ற வெள்ளை மனம் கொண்டு
உறவுகளை பேணி வளர்க்கிறோம்
ஒற்றுமையா நாங்க வாழறோம்
அலுப்பு சலிப்பு கிடையாது
களிப்பு சிலிர்ப்பு உண்டுதான்
மூட்டுவலி இடுப்புவலி கிடையாது
கூட்டுகுடும்ப மான எங்கள் வாழ்க்கையிலே
கரங்கள் வலிமைபெற உழைக்கிறோம்
உரம் பெறுது எங்கள் உடம்பும்தான்
நாலெழுத்து நாங்க படிக்கலே
இருந்தாலும் கண்ணீர் வடிக்கலே
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக