வியாழன், 28 மே, 2015

வல்லமை --29--5--2015 -- நாட்டுப்புற பாடல்

Home » இலக்கியம், கவிதைகள் » நாட்டுப்புறப் பாடல்!
நாட்டுப்புறப் பாடல்!
Friday, May 29, 2015, 5:46இலக்கியம், கவிதைகள்Add a comment
-சரஸ்வதி ராசேந்திரன்
பெண்: ஏரிக்கரை ஓரத்திலே
ஏத்தம் இறைக்கையிலே
என்மனசைப் பறிகொடுத்தேன் மாமா
உன்மனசில் எனக்கிடம் தரலாமா?
ஆண்: கண்டாங்கி சேலைகட்டிக்
கை நிறையக் கொசுவம் வைச்சுக்
கஞ்சிக்கலையம் சுமந்துவரும் கண்ணம்மா என்
நெஞ்சுக்குள்ளே நீ இருக்கே தெரியுமா?
பெண்: வக்கணையாச் சோறாக்கி
வட்டிலிலே போட்டுவைச்சேன்
சட்டமாத் தின்னுபோட்டு நீ
வெட்டிக்கதை பேசாம
விரசா வந்து பரிசம் போடு மாமா உன்
சரசமெல்லாம் தாலிக்கப்புறமா!
ஆண்: நாளும் நல்லா உழைச்சு நான்
நாலு காசு சேர்த்துச்
சொந்தக்காலில் நின்னு
வந்து உன்னை முறையா கேட்பேன் தாலி
தந்தபின்னே உன்னைத்தொடுவேன்!
பெண்: வாழ்ந்தால் உன் கூட வாழணும்
உன்கையாலே பூமாலைவாங்கோணும்
அதுதானே என் ஆசை மாமா!
ஆண்: எனக்கது நீ சொல்லித் தெரியணுமா?
உனக்காகத் தானே நான் இருக்கேன் கண்ணம்மா!
இருவரும்: நல்ல நாளும் கனியட்டும்
நாடு நல்லாச் செழிக்கட்டும்
பெத்தவங்க ஆசியோடும்
மத்தவங்க வாழ்த்தோடும்
மணவறையில் அமர்ந்திடுவோம் நாமே
வானம் பூமிபோல நிறைஞ்சிருப்போம்
வாழ்வு தாழ்விலே இணைஞ்சிருப்போமே!
நன்றி-வல்லமை--29-5-20vallam

ஞாயிறு, 24 மே, 2015

தமிழ்த்தேர்--வைகாசிமாத இதழ்-பட்டுக்கோட்டையார் பாடல்கள்


வல்லமை -புகைப்படபோட்டி -13



படிப்பில் கோட்டைவிட்டு, அன்னையின் அடிக்கு பயந்து மரமேறிய பாலனுக்குப் புத்திமதி சொல்லும்திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் வரிகள்…



போனால் போகட்டும் போடா
படிக்கின்ற நேரத்தில்
பட்டம்விட்டு
திரிந்தாய்
காலை மாலை
கண்டபடி 
சுற்றினாய்
சொல்லச் சொல்ல
கேட்காமல்
நாயின் வாலைப்போல்
நிமிராது நின்றாய் 
படிக்கும்போது 
இல்லாத பயம்
அடிக்குப் பயந்து
மரமேறி அமருகிறாய்
போனால் போகட்டும்
வெற்றியும் தோவியும்
வீரனுக்கழகு
ஒன்பதாவதுதானே
அடுத்தமுறையாவது
அயராமல் படித்து
உயரப்பார்
அடிக்கமாட்டேன் 
இறங்கி வா


மேயும் மனதை
அடக்கி ஒடுக்கி
மெய்யாய் படித்து
மேன்மை அடையலாம் வா
இந்தமுறை
போனால் போகட்டும் 
வாடா என் கண்ணா
வந்து சாப்பிடு..
அம்மா அடிக்கமாட்டேன்
இது சத்தியம்.
சரஸ்வதிராசேந்திரன்

திங்கள், 18 மே, 2015

தமிழ்த்தேர்---முதல் கவிதை --பங்குனி மாத இதழ்


வல்லமை ---புகைப்படபோட்டி-11 புதுப்பித்தல்

”வாரநாட்கள் முழுவதும் அலுவலகத்திலேயே உழலும் இவர்களுக்கான ஒரே பொழுதுபோக்கு இந்தக்கடற்கரையும், மணல் விளையாட்டும்தான்! இவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்!” என்று அன்புக் கட்டளையிடும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் வரிகள்…
saraswathirajendran wrote on 8 May, 2015, 12:46
புதுப்பித்தல்
திங்கள் முதல் சனி, வரை
அலுவகத்தில் அவனுக்கு
இடையறாத வேலை
அவளுக்கோ அலுவலகம்
வீடு என இரட்டைக்குதிரை
சவாரிஎன்ன செய்வார்கள்?
ஞாயிறு   வந்தால் போதும்
மெல்ல எழுந்து மெல்ல குளித்து
சமையலறைக்கு ஓய்வுகொடுத்து
ஹோட்டலில் சாப்பிட்டு 
கடற்கரை கண்டார்கள்
அவரவர் சுதந்திரத்தில்
அவரவர் தலையிடாமல்
சின்ன வயசு சந்தோஷத்தை
சிறைபடுத்தி மண்ணிலே
கலையுணர்வு  காண
அவனோ.  நண்பர்களிடம்
குறுக்கீடு இல்லாமல்
கடலைபோட்டும்
கேண்டிகிரஷ் ஆடியும்
தங்களை தாங்களே
புதுப்பித்துக்கொண்டிருந்தார்கள்
அடுத்த  நாள்  விடியலுக்காக
பாவம் அவர்கள்
வேலைப்பளு, வில்
இந்த சின்ன சந்தோஷத்திற்காக
கடற்கரை  மணலில்  ஹாயாக!
யாரும் டிஸ்டர்ப் செய்யாதீர்கள்
அந்த சின்னஞ்சிறுசுகளை
சரஸ்வதிராசேந்திரன்

குமுதம் சினேகிதி--2001


வல்லமை--புகைப்பட போட்டி--12 அனுதாபம்

’மன ஊனம் கொளலே தீது! உடல் ஊனம் முன்னேற்றித்திற்கென்றும் தடையாயிருந்திடாது!’ எனும் உற்சாகச் செய்தியை வரலாற்றுச் சாதனையாளர்கள் வாயிலாய் அறியத்தரும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் வரிகள்…

  • அனுதாபம்
    மன ஊனத்தைவிட
    உடல் ஊனம்பெரிதல்ல
    உடல்  ஊனம்மாற்ற முடியாதது
    கை இல்லாமல்
    கால்களால் கார் ஓட்டுகிறார்
    கண் பார்வை இல்லாதவர்கள்
    இருளையே துணையாககொண்டுசெய்யும்
    காரியங்கள் அற்புதம்
    பீதோவன்செவிடாகிருந்த
    நிலையில்தான் 
    சாகாவரம் பெற்ற ராகங்களை
    உருவாக்கினார்
    கவிஞர் மில்டன்
    பார்வையற்ற நிலையில்தான்
    சொர்க்கம் இழக்கப்படல் 
    என்கின்றகாவியம் எழுதினார்
    ஜூஇல்யஸ்சீசர்
    காக்கா வலிப்பு  நோய்
    இருந்தபோதும் மாவீரனாய்
    திகழ்ந்தார்
    இவர்கள்யாரும் யாரிடமும்
    அனுதாபத்தை
    எதிர்பார்க்கவில்லை
    தங்க ள் குறைபாடுகளை ஈடுசெய்ய
    மிக உயர்ந்த கோட்பாடுகளை
    உருவாக்கிக் கொண்டவர்கள்
    இதோஇந்த மனிதனும் அப்படியே
    தன் மகன்களின்
    சந்தோஷத்தில் மகிழ்ச்சி/கொள்ளும்
    மன உறுதி கொள்கின்றார்
    வாழ்க்கையில் எந்தவித
    குறைபாடும் இல்லாதவர்கள்
    வாழ்க்கையைப்பற்றி
    குறை கூறிக்கொண்டீருக்கும்
    நாம்தான் வெட்கி தலை
    குனிய வேண்டும் அவ்ர்கள்
    வாழ்க்கையைப்பார்த்து
    வீணான அனுதாபமும்
    அணுசரணையும் அவர்களை
    வீழ்த்துமே தவிர உயர்த்தாது
    சரஸ்வதி ராசேந்திரன்

வெள்ளி, 15 மே, 2015

be positive tamil---may 15 -5-2015----தமிழின்புகழ்

பண்டு முதல் இன்றுவரை உயர்ந்த மொழி தமிழ்
கண்டுபலர் சிரம்தாழ்த்தி விண்டுரைத்தார் புகழ்
கண்டவரும் கேட்டவரும் மகிழ்கின்றார் காண்
பண்டவரும் பல்லவரும் சிறப்படைந்தார் தமிழால்தான்
நித்தம் நித்தம் விண்டுரைப் போம் தமிழின் புகழை
சித்தமதில் மகிழ்ந்திடுவோம் அத்தமிழின் எழிலை
பசுந்தமிழ் செந்தமிழ் பைந்தமிழ் தீந்தமிழ்
இசையுரு பொருளெல்லாம் குறிப்பது தமிழையே
சிறந்த புலவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா
நிறைந்தபொருள் கொண்டவர் தம்கவிதை வியப்பிலடங்கா
பசுந்தமிழ் உலகினில் பலகலை உயரவே
பழியறப் படித்திடு பாங்குடன் வாழவே
செந்தமிழ் நாட்டினில் செயல்படு உயரவே
செழிப்புடன் வாழ்ந்திடு சிந்தனை பெருகவே
கேளீர் கேளீர் செந்தமிழின் சிறப்பை யெல்லாம்
வாரீர் வாரீர் அழகுதமிழ் மொழியை கற்றுணர

– சரஸ்வதி ராசேந்திரன்

செவ்வாய், 12 மே, 2015

மனதில் நிறைந்த மக்கள்திலகம்

     மனத்தில்  நிறைந்த மக்கள் திலகம்
ஒரு மனிதன் பிறந்தான்,வாழ்ந்தான் ,இருந்தான்,செத்தான் என்பதுதான் பெரும்பாலோரின் கதை ,.ஆனால் எம்.ஜி.ஆர்  அப்படியல்ல ,இளமையில் வறுமையில் வாடினாலும் கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்குவந்தவர்,  ஒருவன் தான் எடுத்த முயற்சியில் எல்லாம்வெற்றிபெறுவதில்லைஆனால்  எம்.ஜி.ஆரொவ்வொரு கட்டத்திலும் வெற்றிபெற்றார் .ஒரு தாயின் வளர்ப்பு அவரை மேன்மை அடையச்செய்தது தாயிடம் எல்லையற்ற பாசம் உள்ளவர்,தாயின் கட்டளைப்படி நாடக கம்பெனியில் சேர்ந்து நடிக்க வாரம்பித்தார் .பின் மெல்ல சினிமாவில் சான்ஸ் வர ஆரம்பித்தது   அந்த முதல் படம்தான் சதிலீலாவதி ,சினிமாவில்  நடிக்க வந்தாலும் ,அவர்தனிப்பட்ட வாழ்க்கையில்   எப்படி குடி ,சிகெரெட் இல்லாமல் இருந்தாரோ,அது போன்று  படத்திலும் குடி சிகெரெட்  அவர் தொடுவதில்லை அவ்ரது ரசிகர்கள்    தன் படத்தைப்பார்த்து  கெட்டுப்போகக்கூடாது   என்ற உயரிய நோக்கிகிலும்.மிக ஜாக்கிரதையுடனும் சினிமாவி நல்ல விஷயங்களை  ,  நல்ல கருத்துக்களை    எடுத்து சொன்னதால் மக்களுக்கு அவர் நல்ல குணங்கள்  பிடித்துப்போனது மக்கள்மனதில் அவர்  நிறைந்தார்  தன் படங்களில் கூட நல்லக் கருத்துக்களையே பதிவு பண்ணச்சொல்லி பாடகர்களை வேண்டுவதும் உண்டு ; பசி என்று வந்தவருக்கு இல்லை என்று சொன்னதில்லை  உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்தார் அடிப்படையிலேயே நல்ல குண்ங்களையுடையவர் ஆதலால்   அவரை மக்களுக்குப்பிடித்துப்போனது. அவர் நடித்த சினிமா நூறு நாட்கள் ஒட்டி மக்களின் அமோக வவேற்பு பெற்றதால் அறிஞர் அண்ணா அவர்கள்  எம்.ஜி.ஆரிடம் நட்பு கொண்டார் ,அண்ணாவின் கொள்கைகள் எம். ஜி.ஆரூக்கும் பிடித்துப்போனது  அதனால் மெல்ல அரசியலுக்கு வந்தார்  அரசியல் வாழ்க்கையிலும் அவ்ர் மக்கள் ஆதரவோடு  முதல் அமைச்சர் ஆனார்  முதலமச்சராக வந்தாலும்  அடக்கத்துடன் மக்கள்மத்தியில்  நல்ல பெயர் எடுத்தார் , பகைவனுக்கு க்கூட அவ்ர் கருணை காட்டியவ்ர் எம் .ஆர் ராதா  சுட்டபோதுகூட அவரை மன்னித்த மாமனிதர்  60 லிருந்து 70 வரை தமிழக மக்கள் இதயத்தில் அகில உலக தமிழ் மக்கள் இதயத்தில் கொடி கட்டிபறந்தவர் மக்கள்திலகம் .தமிழ் நாட்டில் சிறந்த நடிப்புக்கான தேசிய விருதினை பெற்றமுதல் நடிகர் அவர்  ஆனால் நாடகத்தை பின்புலமாக கொண்டவர் என்றாலும் கூட அவர்து படங்களில் அவ்ரிடம் அழுத்தமான முகபாவனைகளும் உடல் மொழிகளும் குறைவாகவே இருந்தன எம்பதனை யாரும் மறுக்க முடியாது  உணர்ச்சிகரமான ந்டிப்பையும் அவ்ரிடம் எதிர் பார்க்க முடியாது.ஆனாலும் கூட அவ்ர் நல்ல விஷயங்களை பாடல் மூலமாகவும் வசனம் மூலமாகவும்  வெளிப்படுத்தியதால் அவ்ர் மக்கள் மனத்தில் நிலைத்து நின்றுவிட்டார்  எம் ஜி ஆர் ஒரு நல்ல மனிதர் ,னல்ல பண்பாளர் . ஏழைகள்பால் இரக்கம் கொண்டவர் .அவ்ர் படங்களில் சின்ன குழந்தைகளுக்கூட அறிவுரைகள் கூறியவர் 
நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே  என்றும் சின்ன பயலே சின்னபயலே சேதி கேளுடா என்று கூப்பிட்டு பயம் கொள்ளக்கூடாது,என்றும் வீணர்களின் பேச்சுக்கு இடம் தர லாகாது என்றும் கூறச்செய்தார் அவர் பாடல்களிலும் நல்ல கருத்துக்களை சொல்லும்படை கவிஞர்களை வற்புறுத்தினார் 
அவர் போடும் கத்தி சண்டைகள்,சிலம்பாட்டம் எல்லாம் கூட குழந்தைகள்முதல் பெரியவர் வரை அவர்பால் ஈடுபாடு கொள்ளசெய்தது,தாயின் மேல் பாசம் கொண்டதால்  பாசம் படம் அடுத்து பாசத்தைவிட நீதிதான் பெரிது என்று சொல்ல நீதிக்குப்பின் பாசம்  படம் வந்தது  , நல்லவன் வாழ்வான்   என்று சொன்னதோடு வாழ்ந்தும் காட்டினார் .,தாய்க்குப்பின் தாரம் என்று படம்  தாயை காத்த தனயன்  படம் எல்லாமே தாயை வணக்கத்திற்குரிய இடத்தில் வைத்தவை  பணத்தை விட பாசம் முக்கியம் பணமா   பாசமா ,பணத்தோட்டம்  பணம் படைத்தவன்   படங்கள் முலம் பாசத்தை உயர்வில் வைத்தார்  ரகசிய போலீசாக வந்து  எதிர் கட்சியின் அக்கிரமங்களை   அம்பலப்படுத்த்னார்  மீனவ நண்பன் ,ரிக்‌ஷாகாரன் வேட்டைக்காரன் என வந்து அசத்தியவர்  இதுகூட கடவுள் இட்ட அரச காட்டளை போலும்   அவர் உடல் நிலை கலைக்கிடமாக இருந்தபோது கோடான கோடி மக் கள் அவ்ருக்காக வேண்டி தவம் இருந்தா ஒர்ரு உதாரணம் போதும் அவ்ர் மக்கள் மனத்தில்  என்றுமே மன்னனாக  காஞ்சித்தலைவனாக குடிகொண்டிருந்தார் என்பதற்கு சாட்சி வாழ்ந்தவ கோடி மறந்தவர் கோடி யாக இருந்தாலும் மக்கள் மனத்தில் முழுமையாக நிலைத்து நின்றவர்  எம்ஜி.ஆர் ஒருவரே என்றால் அது மிகையல்ல  அந்த மூன்றெழுத்து  முடிந்தாபோதிலும் பேச்சிருக்கிறதே அதுதான் அவர்தம் வெற்றி    

திங்கள், 11 மே, 2015

தடாகம் இலக்கிய வட்டம்---ஏப்ரல் மாத தலைப்பு-- விவசாயி

                             தண்ணீர்            வசதி              இல்லை 


                             தடையில்லா     மின்சாரம்     இல்லை

                             இருப்பினும்       விவசாயி       பயிரிட்டு

                            உரமாக்கி            அறுவடை       செய்தால்

                             விலை பெற      வழியே         இல்லை   


                            விளைவிப்           பவன்            ஒருவன்
 
                           விலையை           நிர்ணயிப்       பவன் ஒருவன்
                      
                           லாபம்               அடைபவன்       வேறொருவன்

                           விவசாயம்          செய்பவன்            எவனோ
                           விளையும்              பயிருக்கு              அவனே 

                          விலையை            நிர்ணயம்           செய்யும் நாளே

                          விவசாயி              கடனில்லாமல்       வாழும் நாள்

                         விவசாயம்           தான்   இந்தியாவின்    வேர் 
                        விவசாயிதான்          நாட்டின்           முதுகெலும்பு

                       பாரதி சொன்ன        காணி நிலம்        வேண்டும்
                        
                        பாரதம் செழித்திட   விவசாயி            வேண்டும்

                        கணினியில்              நெல் பயிரிட      முடியாது
                      
                       
                        உழவுக்கும்              தொழிலுக்கும்      வந்தனை செய்

                         உழவன்              வாழ்ந்திடவழி      செய் அரசே

சனி, 9 மே, 2015

எழுத்துகாம் --மே 7-5-2015 --அறிவியல் ஆளுமை (ஏனைய கவிதைகள்)

அறிவியல் ஆளுமை

அதிசயம் 
ஆனால் உண்மை 
அறிவியல் ஆளுமை 

பெற்றவர்களின் 
மடியில் 
பிள்ளைகளைவிட 
மடிக் கணினிகளே 
அமர்ந்திருக்கின்றன 
அதிக நேரம் 

கன்னியர் ஆடவர் 
இருவர் காதுகளிலும் 
எப்பொழுதும் 
கைபேசிகளே 
இடம் பெற்றிருக்கின்றன 

எங்கே இருக்கிறாய் 
என்று கேட்டால் 
இதோ ந்ம் வீட்டருகேதான் 
என எளிதாக பொய் 
பேசமுடிகிறது 

திருமண பத்திரிக்கையை 
முக நூலில் 
அப்டேட்செய்தால் 
வாட்ஸப்பிலேயே 
மொய் வைக்கப்படுகிறது 

மரணசெய்திகேட்டால் 
முக நூலிலேயே 
ரிப் போட்டு 
ரிலாக்ஸ் 
ஆகிவிடுகிறார்கள் 

ட்விட்டரிலேயே 
பன்ச் டயலாக் போட்டு 
ட்விஸ்ட் அடிக்கமுடிகிறது 

ஆன் லைனிலேயே 
அல்வா ஆர்டர் 
செய்யமுடிகிறது 

செயற்கை முறையில் 
ஆடு ,கோழி குழந்தை 
செய்யமுடிகிறது 

எல்லாம் செய்ய 
முடிந்த அறிவியலால் 
இயற்கையை மட்டும் 
தடுத்து நிறுத்த முடிய வில்லையே ஏன் 

சரஸ்வதிராசேந்திரன் 
மன்னார்குடி

திங்கள், 4 மே, 2015

வல்லமை--படப்போட்டி --8

                                       மஞ்சள்   குங்குமம்  
                                         மங்கலத்தின்
                                        அடையாளம்
                                        சிவப்புச் சேலை
                                        ஆன்மீகத்தின்
                                        அடையாளம்
                                         நாங்கள்
                                        மந்திரவாதிகளோ
                                        தந்திரவாதிகளோ அல்ல
                                           
                                      ஊரில் மழை வேண்டியும்
                                       நேர்த்திக்கடனை
                                        பூர்த்திசெய்யவும்
                                        காளிகோவிலுக்கு
                                        பக்தி சிரத்தையுடன்
                                        பரவசமாய்செல்கிறோம்
                                        எம் மக்கள்எம் ஊரு
                                        எல்லா வளமும் பெற
                                        காளியாத்தாகோவிலுக்கு
                                        கால் ந்டையா போகிறோம்
                      சரஸ்வதி ராசேந்திரன்

வல்லமை புகைப்படபோட்டி-10




வல்லமை  புகைப்படபோட்டி 10
மேகலாராமமூர்த்தி--இனி, இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளில் என் கவனத்தைக் கவர்ந்தவற்றைப் பட்டியலிடுகிறேன்

இயற்கையோடும், விலங்குகளோடும் பேணும் உறவு மனிதர்களோடு சாத்தியமற்றுப்போவதை விளக்கும் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரனின் வரிகள்…
உன்னோடும் 
மலைகளோடும்
பூக்களோடும்
நதிகளோடும்
மனம் கொள்கிற
உறவை
சக மனிதர்களோடு
கொள்ள முடிவதில்லை
நன்றியுள்ள நீ மேல்
மனிதர்களைவிட!
*****