திங்கள், 23 ஜூன், 2014

பானுவின் மாமியார் --அவள் விகடன்-25-10-2011


கோமதி ஈசி சேரில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தாள் .வெளி கேட் திறக்கும் சப்தம் கேட்க -மருமகள் பானுவின் அப்பா ஆராவமுதன் வந்து கொண்டிருந்தார் .சட்டென்று எழுந்து ரூமுக்குள் சென்று விட்டாள்.
"பானு.....பானு "
அடுப்படியில் வேலையாக இருந்த பானு ,பசுவின் குரல் கேட்ட கன்று போல் துள்ளி வந்தாள். "வாங்கப்பா ,உட்காருங்க ,ஊரிலே அம்மா ,தம்பி ,தங்கைகள் நல்லாஇருக்காங்களா ?"
"எல்லோரும் நல்லா இருக்காங்க ,உங்க மாமியார் நல்லைருக்காங்கள?இந்தா ....இந்த அல்வா மிக்சர் ,பூ ,உன்மாமியாருக்கு
பிடிச்ச பச்சை நாடான் பழம் .வாழை பழத்தை அவங்ககிட்டே கொடு "
" ஏன்பா இவ்வளவு ?'
"மகளை பார்க்க வரப்ப வெறுங்கையோடு வரலாமா?சரி மாப்பிள்ளை நல்லைருக்காரா?'.
எல்லோரும் நல்லா இருக்கோம்பா"
பானு..பானு 'கோமதி கூப்பிட்டாள்.
'உட்காருங்கப்பா ,அத்தை கூப்பிடறாங்க கேட்டுட்டு வரேன் "
"என்ன அத்தை ?""யாரோட பேசிட்டிருக்கே ?'
"அப்பா வந்திருக்காங்க "
"அதான் கல்யாணமான மூணு மாசத்திலே ஆறு தடவை வந்திட்டாரே "
இதை கேட்டதும் முகம் வாடி போனாள்பானு அந்த சமயம் எதிர் வீட்டு பத்மா"கோமதியக்கா "என்று குரல் கொடுக்க
அவசரமாக வெளியே சென்றாள்கோமதி வந்திருந்த சம்பந்தியை என்னவென்றுகூட கேட்காமல் .
"என்ன பத்மா ?
ரேசனில் பருப்பு போடறாங்களாம் நீங்களும் வரிங்களா ?"
"இரு பானுவை அனுப்பறேன் "என்றவள் உள்ளே திரும்பி -
"பானு ,"பத்மாவோட போய் ரேசனில் வாங்கிட்டு வந்துடு '"
"இதோ அப்பாவுக்கு காப்பி கொடுத்துட்டு ..வந்துடுறேன் '
"அவர் காப்பி சாப்பிடாமலா வந்திருப்பார் '?அவர் எங்கேயும் ஓடிப்போக மாட்டார் ,போயிட்டு வந்து கொடுக்கலாம் ,பாவம் பத்மா நிக்கறா "..
"அப்பா இதோ வந்துடுறேன் "
இதற்கு மேலும் அங்கிருக்க கிறுக்கா அவருக்கு ? "இல்லம்மா ,உன்னை பார்க்கத்தான் வந்தேன் பார்த்துட்டேன் புறப்படுறேன்
வரேன் சம்பந்தி "வாஞ்சையுடன் சொல்லி புறப்பட்டார் ஆராவமுதன்
பானுவுக்கு ஆத்திரமாக வந்தது ,பாவம் அப்பா அவர்கிட்டே இரண்டு வார்த்தை கூட பேச விடாம விரட்டுராங்களே ...ச்சே ,வீட்டுக்கு வந்தவரை வாங்கன்னு தான் சொல்லலே காப்பியாவது கொடுத்து அனுப்பலாம்னு பார்த்தா
,ஏன் இப்படி இருக்காங்க அத்தை ?என்னை நல்லாத்தான் வெச்சுருக்காங்க ,பிரியமாத்தான் இருக்காங்க அப்புறம் ஏன் இப்படி ?நான் வேணும் ...என் குடும்பம் பிடிக்கலையா ?"அப்பாவுக்கு என்னை பிரிஞ்சுருக்கிறது கஷ்டமா இருக்கு பாசத்தில் இரண்டு மூணு தடவை வந்திருப்பார் ,அதுக்காக இப்படியா ?'
"இந்தாம்மா ..கார்டை கொடுத்துட்டு பையை பிடி "ரேசன் கடைக்காரர் கேட்டதும்தான் சிந்தனை கலந்தால் பானு .
"பானு ஏன் ஒரு மாதிரியா இருக்கே ?என்று ஆரம்பித்தாள்பத்மா .
"ஒண்ணுமில்லே பத்மா அத்தே "
"இல்லை பானு கடையிலேயே பார்த்தேன் நீ ஏதோயோசனையிலேயே இருந்தே .என்னவிசயம் ?'
இவரை நம்பி பேசலாமா? இவர் அத்தைக்கு வேண்டியவராச்சே ...நாம அவசரப்பட்டு எதையாவது சொல்ல அவர் ஒன்னுக்கு இரண்டா போட்டுகொடுத்துட்டா ..?உஷாரானாள்பானு . "ஒண்ணுமில்லே அத்தை ..தலை வலி அதான் "என்று மழுப்பினாள் . "எனக்கு தெரியும் பானு உங்கப்பா உன்னை பார்க்க வந்ததும் ,உங்க அத்தை அவரை இன்சல்ட் பண்றதும் எனக்கு தெரியும்
அதானே உன் கவலை ?'
"இல்லையில்லை ...அதெல்லாம் ஒண்ணுமில்லை "அவசரமாக மறுத்தாள்பானு ."எனக்கு எல்லாம் தெரியும் உன் அத்தை நல்லவங்க பானு உன் அப்பா சாதாரண வேலையில் இருப்பவர் தினக்கூலி வாங்குபவர் அவர் உன்னை பார்க்க வரப்ப ல்லாம்
இருநூறு ரூபாய்க்கு குறையாம ஏதாவது வாங்கிட்டு வறாராம்அந்தப்பணம் இருந்தா ...உன் அப்பா குடும்பத்துக்கு இரண்டு நாள் சாப்பாட்டு செலவுக்கு வருமாம் உன் அத்தை இப்படி பேசினாலாவது ,,தன வரவை குறைச்சு .குடும்பத்துக்கு செலவு செய்வாரேன்னுதான் கோமதியக்கா இன்சல்ட் செய்றது மாதிரி நடிக்கிறாங்கலாம்.இதை என் கிட்ட சொல்லி வருத்தப்பட்டாங்க
இனி பதினைந்து நாட்களுக்கொருமுறை உன்கிட்ட பழம் ஸ்வீட்ன்னு வாங்கி கொடுத்து அப்பாவை போய் பார்த்துட்டு வரச்சொல்லி அனுப்பனும்னு கூட சொன்னாங்க இது பற்றி மகன் கிட்டே யும் பேசிட்டாங்களாம் . கோமதிரொம்ப நல்லவள்
பானு .கை பிடித்து சொன்னாள் பத்மா .இதை கேட்ட பானுவின் விழிகள் நனைந்தன .
அவள் விகடன் ----------------25 -10 -2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக