திங்கள், 23 ஜூன், 2014

வேதனைதான் வேர்வைக்கும் -தங்க மங்கை --ஆகஸ்ட்-2012


'அம்மா இப்ப என்ன குடி முழ்கிடுச்ச்னு நீ ஒப்பாரி வைக்கிறே ?'வாசவி கேட்டாள்
'நீ ஏண்டி சொல்ல மாட்ட,உங்க அப்பா இருந்தா இப்படி செய்திருப்பாரா ,உங்க பெரியப்பா ,வாயில்லா பூச்சியானஉங்கப்பா இருக்கையிலேயே ,பங்குகளை நான் பார்க்கிறேன்னு சொல்லிச்சொல்லி லாபத்தில பெரும் பகுதியை அவர் சாப்பிட்டுட்டு மீதியைத்தான்கொடுப்பாரு உங்கப்பா கிட்டே அண்ணன் சொல்லை தட்டாத தம்பியாச்சே உங்கப்பா .நம்பி நம்பி ஏமாந்தாரு.நான் ஏதாவது சொன்னாகூட சண்டைக்கு வருவாரு இப்ப,அவரே போனதுக்குபின்னாலே .,உங்க பெரியப்பா என்னசெஞ்சாரு ,கொஞ்சக்கூட ஈவு இரக்கமில்லாமல் பெண்
பிள்ளையை வச்சிருக்காலேன்னாவது,நம்மை ஏமாற்றாமல்
நமக்கு சேர வேண்டியதை கொடுத்தாரா?அதை இதை கணக்கு காட்டி நம்மை அம்போன்னு விட்டார் அதை மறக்க சொல்றியா ?ஜானகி குமுறினாள்
"அம்மா ,நடந்தது நடந்திட்டு ,இத்தனை காலம் நம்ம கையை ஊன்றி இன்னைக்குநல்ல நிலைக்கு வந்துட்டோம் .இன்னமும்
நீ அதையே சொல்லிக்கிட்டு இருந்தா எப்படி?
அப்பாவுக்கு தப்பாதவள்டி ,நீ இந்த நிலைக்கு வர ,நாம எத்தனை அவமானங்களை சந்திருச்சிருப்போம் ,மறந்துட்டியா ?'
'சரி இப்ப செய்யணும்னு சொல்றே ?"
"அந்த ஆளுக்கு நீ பத்திரிகை அனுப்பக்கூடாது ,அவர் கண் பட்டாலே இந்த வீடு புகைஞ்சிடும் "
"அம்மா ஒரு திருத்தம் ,நான் நேரில் போயோ ,தொலை பேசியிலோகூப்பிடலே .மூன்றாம் மனுஷனுக்கு அனுப்பற மாதிரி
பத்திரிக்கையை தபாலில் போட்டுடறேன் சரியா?"
"அதுதான் சரி ,அப்படியே ரோசம் கெட்டு போய்வந்தாருன்னா ,நான் பேசிக்கிறேன் "ஜானகி கோபத்தோடு சொன்னாள்.
அவள் கோபப்பட காரணம் உண்டு
ஏகாம்பரமும் ,ராஜவேலுவும் அண்ணன் தம்பிகள் .ராஜவேலு அண்ணனிடம் அளவுக்கதிகமான பாசமும் ,மரியாதையும் வைத்திருப்பவர் ..ஏகம்பரமோ சுயநலவாதி ,பெற்றோர்கள் சொத்தை கூட ,தம்பிக்கு அதிக விளைச்ச லில்லாத் பங்கையும்
தனக்கு நல்ல பங்குமாகத்தான் பிரித்தார் அதையும் தானே விவசாயம் பார்ப்பதாகசொல்லி வருடா வருடம் மூக்கால்அழுதபடியே தான் நெல் அளப்பார் .என்ன ஏன் என்று கூட ராஜவேலு கேட்கமாட்டார் .அண்ணன் எதிரில் நின்று கூட பேசபயப்படுவார்.திடீரென்று எதிர் பாராதவிதமாக விபத்தில் ராஜவேலு இறந்து போனார் .ஏகாம்பரத்துக்கு கொண்டாட்டமாக
போய்விட்டது அதுக்கு கடன் வாங்கினான் ,இதற்குகடன் வாங்கினான் என்று பொய்சொல்லி ராஜவேலுவின் பங்கையும் விற்று சுவாகா பண்ணிவிட்டார் .தன்மைகளுக்கும் ,மகனுக்கும் சகல ராஜபோகங்களையும் தந்தவர் ,தம்பி மனைவியையும் ,படித்துக்கொண்டிருந்த வாசவியையும் அம்போன்னு விட்டுவிட்டார் .ஜானகி தனக்கு தெரிந்த ஒயர் பின்னுதல் ,பிரம்புகூடை பின்னுதல் என சுய வுதவி குழுவில் சேர்ந்து பல தொழில்களை செய்து தன்னையும் மகளையும் காப்பாற்றிகொண்டாள்.கல்லூரியில்உதவி தொகை துணையுடன் வெற்றிகரமாக படிப்பை முடித்து இன்று கலெக்டர் ஆகிவிட்டாள்.
தன்சொந்த பணத்தில் அழகான வீட்டை கட்டி ,தனக்கு பிடித்தவனுடன் திருமணமும் செய்துகொள்ள போகிறாள் .அதற்கான
கிரகபிரவேச பத்திரிக்கையை தான் ,தன்னை ஏமாற்றிய மைத்துனருக்கு ,அனுப்பக்கூடாது என்று ஆத்திரப்ப்டுகிறாள் நியாயம்தானே ? பல வி .ஐ .பி க்கள் வாசவி வீட்டிற்கு வந்தார்கள் .அவர்களை எல்லாம் மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்துக்கொண்டிருந்த வாசவி ,வீட்டு வாசலில் ஆட்டோவில் வந்து இறங்கிய தன் பெரியப்பாவையும் ,பெரியம்மாவையும் பார்த்து அதிர்ந்தாலும் ,அம்மா கண்ணில் பட்டால் என்னவாகுமோ என பயந்து ஓடினாள்தெருவிற்கு .
"வாங்க பெரியப்பா ,வாங்க பெரியம்மா ,எங்கே நேரில் வந்து கூப்பிடலைன்னு வராம இருந்திருவிங்களோன்னு பயந்தேன் "
என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது அவர்களை பார்த்துவிட்ட ஜானகி ஆவேசத்தோடு அவர்களை நோக்கி வர ,வாசவி தவித்து போனாள்.
. அவசரமாக அம்மாவை நோக்கி போனாள்.'"அம்மா இது வி. ஐ .பி க்கள் வந்திருக்கிற விழா .விரோதியா இருந்தாலும்
வாசல் தேடி வந்தவங்கள அவமரியாதை செய்யக்கூடாது விழா முடிந்ததும் மற்றதை பார்த்துக்கலாம் .உனக்கு பிடிக்காட்டி
,நீ வேற வேலையை பார் ,நான் அழைச்சுக்கிட்டு போய்,சாப்பிட வைக்கிறேன் . தயவு செய்து எல்லோர் முன்னாலேயும் விழாவை அசிங்கப்படுத்திவிடாதே .மற்றவர்கள் நம்மை தப்பா நினைப்பாங்க புரிஞ்சுக்க ..."
'அப்பாவை போலவே பொண்ணு ,நீயும என்னை வாயடைச்சுடு ,என்னவோ போ ''ஜானகி கோபித்துகொண்டு உள்ளே போனாள் . நிலைமையை புரிந்து கொண்ட ஏகாம்பரம் வாசவின் கைகளை பிடித்துக்கொண்டு தன்தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டார் .எல்லோர் முன்னிலையிலும் .ஆனால் வாசவி அதை தடுத்து ,"பெரியப்பா ,நான் உங்களை தப்பா நினைக்கலை
.நீங்க அன்னைக்கு அப்படி செய்யாதிருந்தால் இன்று நான் இந்த நிலைக்கு வந்திருக்கமாட்டேன் .யாருடைய வெற்றிக்கும்
ஒரு வேதனைதான் வேர் வைக்கும் ,இன்னைக்கு நான் கலெக்டர் ஆனதுக்கு காரணமே நீங்க .
என்னை உதாசீனப்படுத்தியதுதான் .அந்த நன்றிக்காகதான் உங்களை அழைத்தேன் .இந்த விழாவிற்கு .நான் எல்லாத்தையும் மறந்துட்டேன் .நீங்களும் மறந்துடுங்க .நீங்கதான் முன்னே நின்னு ,என் அப்பா ஸ்தானத்தில் இந்த கிரகபிரவேசத்தையும் அடுத்த சில நாட்களில் நடக்கபோற என் கல்யானத்தையும்முன்னே நின்று நடத்தி வைக்கணும் பெரியப்பா "என்றுசொல்ல ,
கூனிக்குறுகி அவள் கைககளை பிடித்துகொண்டு "உனக்கும் உங்கப்பாவை போலவே பெருந்தன்மை அதிகம் ஆன்னல் நான்
துரோகி என்னை போய்முன்னே நின்று நடத்த சொல்றியே .அதுக்கு எனக்கு தகுதியே இல்லம்மா .இந்த சின்னவயசிலே உனக்குத்தான் எத்தனை மனபக்குவம் "கண்ணீர் விட்டார் .
"பெரியப்பா நாளும் கிழமையுமா இப்படி கண்ணீர்விடலாமா ?போங்க போய் வேண்டிய காரியங்களை பாருங்க ,சீக்கிரம்.....
கண்ணீரை துடைத்தபடியே உள்ளே போனார்கள் ஏகாம்பரமும் வசந்தாவும் .இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஜானகி ,
தன மகளின் மனப்பக்குவத்தை பார்த்து தானும் அவர்களிடம் மரியாதையாக நடந்து கொண்டாள் அதை பார்த்த ஏகாம்பரமும் வசந்தாவும் மனம் நொந்து அழுதார்கள் குற்றமுள்ள நெஞ்சாயிற்றே /ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டார்கள்
Thanga mangai,
August,2012
(Monthly magazine)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக